கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 395 ஆக இருந்த நிலையில் நேற்று மீண்டும் 100 க்கும் மேற்பட்டோர்களின் பரிசோதனை முடிவில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் பெண் காவலர் உட்பட 25 பேர்கள் கள்ளக்குறிச்சி நகரத்தில் வசிக்கும் நபர்கள் ஆவர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டு கிருமிநாசினி தெளித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர் பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி காவல் நிலத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சேலம் மெயின் ரோடு முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரான்குலா தடுப்புகள் அமைக்கப்பட்ட மந்தைவெளி, கவரைத்தெரு, மீன்மார்க்கெட், சேலம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். மேலும் சில இடங்களில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கவும் உத்தரவிட்டார். அப்போது சப்-கலெக்டர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், டி எஸ் பி ராமநாதன், நகராட்சி பொறியாளர் பாரதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.