கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றினால் 437 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,நேற்று 210 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 21 பேருக்குத தொற்று உறுதிசெய்யப்பட்டது.
பாதிப்பு மேலும் அதிகரித்த காரணத்தினால் இன்று முதல் 25 கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள் வருவதற்க்கு இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் கிரண் குரலா விடுவித்த செய்திக்குறிப்பில் கூறப்படுள்ளது.
இதனிடையே தடுப்பு நடவடிக்கையாக உழவர் சந்தை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இப்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாற்றப்பட்டுள்ளது. இங்கே உழவர் சந்தை அதிகாலை 5.00 மணியில் இருந்து 9.00 மணிவரை இயங்குகிறது