ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில் தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் உதவிச் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக்கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
‘‘கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று, தேசப்பற்று… எல்லாமே மனித ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது.மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்று தனது 90-வது வயதில் மரணமடையும் வரை, உலகெங்கும் சுற்றிப் போதித்தார் ஜே.கே.
ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.
J K வின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மக்களுக்கு புதியவை. அவரை பற்றி தெரியாத மக்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
A D Baalan
Editor – Kallakurichi Guide
‘‘கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று, தேசப்பற்று… எல்லாமே மனித ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது.மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’