அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்.???

Better Decisions-Kallakurichi Guide
வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?
         1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது,  வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்”  என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.
         அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டனஅன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.
           சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.
          1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.2020–ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.
         அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்; 19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்–பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.
          இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
  
இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்…”,Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,
 இது ஒரு பேராபத்துநாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்
           67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்,திருமணம் நிலை குலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்.அங்கு போல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்.
           குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது.ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன.சேமிப்பும் குறைகிறது.எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல.உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம். ஆதலால் தான் நம்  வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்,(கிளப்பு கடைகளில்) சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர். ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்…”,Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,
           இது ஒரு பேராபத்து…நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்…
          முன்பெல்லாம் நம் முன்னோர்கள்,யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள், ஆகையால்  வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.
அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்.
காலையில் எறும்புக்கும்,
பகலில் காக்கைக்கும்,
இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்.
குடும்பமாய் இருங்கள்.
ஒற்றுமையாய் வாழுங்கள்…
….

படித்ததில் பிடித்தது

A D Baalan

Editor- Kallakurichi Guide

Spread the word

Top Searches - Kallakurichi Guide

Comments

  • No comments yet.
  • Add a comment