Kallakurichi Guide

Kallakurichi Guide-logo

 


குறள் 809: அதிகாரம் 81 – பழைமை

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

மு.வ விளக்க உரை: உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

கலைஞர் விளக்க உரை: தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.

G.U Pope: They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!