Kallakurichi Guide
Details
வாகை மரச்செக்கு எண்ணெய்க்கும் மற்ற எண்ணெய்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
வாகை மரச்செக்கில் எண்ணெய் பிழிப்படுவதால் எண்ணெய் சூடேறுவதில்லை 32℃ குள் மட்டுமே வெப்பம் இருக்கும். எனவே, எண்ணையில் இருக்கும் அனைத்து தாதுக்களும், வைட்டமின்களும் அப்படியே நமக்கு கிடைக்கிறது. மரச்செக்கு எண்ணெய் தனது இயற்கையான நிறம், மணம் மற்றும் அடர்த்தி அனைத்தையும் அப்படியே கொண்டிருக்கிறது. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றொருவகை இரும்பினால் ஆன செக்கில் அதிக உராய்வு இருப்பதால் எண்ணெய் சூடேறுகிறது. அதனால், கெட்ட கொழுப்பு விகிதாசாரங்கள் மற்றும் கூடுதல் நிறம் மற்றும் அடர்த்தி குறைந்து காணப்படும்.
வணிகரீதியாக பெரிய நிறுவனங்கள் இதுவரை நமக்கு வழங்கிவந்த எண்ணெய்கள் Expeller எனப்படும் கருவிகள் மூலம் தயாரிக்கப்படுபவை. அதில் சுமார் 900℃ வரை எண்ணெய் சூடேற்றப்படுகிறது. சுமார் 55℃ வரை சூடேறினாலே அதில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் இழக்கிறது. கெட்ட கொழுப்பு விகிதாசாரம் கூடுகிறது. இந்த தகவல் அனைத்தையும் Google ல் யார் வேண்டுமானாலும் பெறலாம்.
இது போன்ற மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் Crude Fiber எண்ணெய்களால் நாம் நமது ஆரோக்கியத்தை இழந்து விட்டோம் இப்போதும் இழந்து கொண்டிருக்கிறோம். நமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் ஆரோக்யத்தையாவது காப்பாற்ற வேண்டாமா? அவர்களுக்கு சொத்துக்களை சேர்ப்பதை விட நல்ல ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டாமா? எனவே நமது வீட்டில் கலப்படம் அற்ற வேதிப்பொருட்கள் சேர்க்காத உணவு பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களை சுத்தமான முறையில் மரச்செக்கில் தயாரித்து சேவை மனப்பான்மையோடு வழங்குவதை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடைய வேண்டுகிறோம்.
Add a review