Kallakurichi Guide
Sri Veeratteswara Temple Tirukoilur
Description
இறைவன் : வீரட்டேஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
உற்சவர்: அந்தகாசுர வைத மூர்த்தி
புராணப்பெயர்: அந்தகபுரம், திருக்கோவலூர்
தலவிருச்சகம் : சரக்கொன்றை
தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு
தலச்சிறப்பு: இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்து விநாயகப்பெருமானைக் குறித்து ஔவையார் சீதக் களப எனத்தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது. அட்ட வீரட்ட தளங்களில் மிகத்தொன்மையானதும் வரலாற்று சிறப்பு பெற்றதுமான 2வது வீரட்டான திருத்தலமாகும். ஸ்வாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளாராம்.
எனவே பில்லி சூனியம் வாய்ப்பு போன்ற தோஷங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம். வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. சுக்ரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது.
அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. இது 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது. சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 222 வது தேவாரத்தலமாகும்.
o தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 222 வது தலமாகும். நடு நாட்டு தலங்களில் 11 வது தலமாகும்.
o அட்ட வீராட்த் தலங்களில் மிக பழமையான 2 வீரட்டானம் தலமாகும்.
o அந்தகார சூரனை சிவபெருமான் வதைத்த தலம்.
o விநாயகர் அகவல் பாடிய ஔவையார் அவர்களை திருக்கைலாயத்துக்கு கொண்டு சேர்த்த பெரியானை கணபதி சிறப்புடையது.
o சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் பாடிய திருத்தலம்.
o திருமூல நாயனார் அவர்களின் திருமந்திரம் பாடல் பெற்ற தலம்
o வாஸ்து பூஜை மூலவர் தோன்றிய இடம்
o 64 பைரவர்கள் தோன்றிய இடம்
o சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற இடம்.
o பில்லி, சூனியம் ,வைப்பு ஆகியவற்றிக்கு விமோசனம் கிட்டும் இடம் .
o பாரி வேந்தர்களின் மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகியவர்களுக்கு இத்தலத்தில் கபிலர் மற்றும் ஔவையார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
o ராஜராஜ சோழன் பிறந்த ஊர் . இவருடைய தமக்கை குந்தவை இக்கோயிலுக்கு பொன், பொருள் தந்துள்ளார்.
o கபிலர் உயிர் நீத்த இடம் . இவருடைய குன்று கோயிலின் அருகிலேயே உள்ளது.
o இறைவன் சுயம்புவாக காட்சி தருகிறார். அம்பாள் திரிபுர சுந்தரி தோன்றிய இடம்.
o ஷண்முக வேலவரை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
Add a review