Kallakurichi Guide

Kallakurichi Guide Logo

Description

சுவாமி : த்ரிவிக்ரமன் (திருவடியை உயரே தூக்கிய நிலை நின்ற திருகோலம்).

அம்பாள் : பூங்கோவல் நாச்சியார்.

தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ணா தீர்த்தம், சக்ர தீர்த்தம்.

விமானம் : ஸ்ரீஹர விமானம்.

தலவிருட்சம் : புன்னை மரம்.

தலச்சிறப்பு : வாமன த்ரிவிக்ரம அவதார ஸ்தலம்.  இந்த திவ்ய தேசத்தில்தான் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இரவில் இடைகழியில் சந்தித்து பெருமாளையும் பிராட்டியையும் நேரில் இருட்டில் நெருக்கியபடி சேவித்து மூன்று  திருவந்தாதிகளை பாடிய தலம்.  மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்ரமுமாக  வலகாலால் வையம் அளந்து நிற்கிறார்.  கோயிலுக்குள் இருக்கும் துர்க்கை தேவதாந்திரமாகக்  கருதப்படுவதில்லை.  மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட ஸ்தலம்

சிறப்புகள்:

o 08 திவ்யதேசங்களில் 43 வது திவ்ய தேசமாகும் . நடுநாட்டு திவ்யதேசத்தை சேர்ந்ததுo பொய்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் ,பேய் ஆழ்வார் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம்.
o பொய்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் ,பேய் ஆழ்வார் ஆகிய மூவரும் முக்தி முடிந்த திவ்ய தலம் .
o நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலாக பாடப்பெற்ற தலம் .
o மிருகண்டு முனிவர் இறைவனின் திருவிக்ரம கோலத்தை காண ஆசைகொண்டு தன் மனைவியுடன் பெண்ணையாற்றின் குடில் அமைத்து தவம் செய்து வந்தார் அவரின் தவத்திற்கு இறைவன் மனம் இறங்கி திருவிக்ரமாக காட்சி தந்தார் .
o இறைவன் அத்தி மரத்தினால் ஆனா பெரும் திருமேனி .இடது கரத்தில் இருக்க வேண்டிய சங்கு இங்கு வலது கரத்தில் காணப்படுகிறது . இறைவனை மஹாபலி சக்ரவத்தி ,மிருகண்டு முனிவர் அவரது மனைவி ,சுக்ராச்சாரியார் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோர்கள் சூழ்ந்துள்ளார்கள் .
o காஞ்சிபுரத்தில் வீற்றியிருக்கும் உலகளந்த பெருமாள் செதுக்கிய சிற்பம் ஆனால் இங்கே அழகிய திருவுருவமாக காட்சிதருகிறார் .
o க்ஷேத்ர பாலகராக வேணுகோபாலன் பாமா ருக்மணியோடு காட்சிதருகிறார் . இவர் சாலிக்ராம கல்லினால் ஆனவர் ,இவரை வணங்கிய பின்னரே மூலவரை தரிசிக்கவேண்டும் .
o லட்சுமி நாராயணர் ,லட்சுமி வராஹர் ,லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தனி தனியாக உள்ளன .
o விஷ்ணு துர்க்கை பெருமாளின் சன்னதிக்கு அருகிலேயே காட்சிதருகிறார் . இது இங்கு மட்டுமே காணக்கூடிய ஒன்றாகும்

தல வரலாறு :

மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்து விடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார்.

வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான்.

விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார். மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!