கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே 4 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் கூடுதலாக 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மேல் அக்ரஹாரவீதி, கவரைத்தெரு, கந்தப்பொடி சந்து, பூ மார்க்கெட், நேபால் தெரு உள்ளிட்ட பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இதனால் சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதார துறை மேற்கொண்டனர். இதனால் கள்ளக்குறிச்சி நகரமே ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.